தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் சில முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் 4 நகராட்சிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக சாலைகள், பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேலும் சிறப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
