நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று ABP – CVoter இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி ஆகிய இரண்டும் ஒரு தொகுதியை கூட வெல்லாது என்று இந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகளில் அதிமுக மற்றும் பாஜக ஒன்று இரண்டு தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளது என சொல்லப்பட்டது.