தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது . இந்த அறிவிப்பை முதல்வர் மு க ஸ்டாலின் 2.50 லட்சம் மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தில் ஊரக பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 2.50 இலட்சம் மாணவர்களுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்ட உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காலை உணவுத்திட்டத்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் வருகைப்பதிவு 95% ஆக அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு குறித்து பேசிய அவர், ‘இத்திட்டத்தால் தாய்மார்களுக்கு மனஅழுத்தம் சற்று குறைந்துள்ளது. குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கின்றனர். இட்லி, தோசை அளிப்பது பரிசீலனையில் இருக்கிறது’ என்றார்.