விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தர்மபுரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்தால் எப்போதோ இந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். பல வருட போராட்டத்திற்கு பிறகு தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை இதுதான் காலத்தின் கட்டாயம். இதனை அரசியல் வல்லுனர்களே ஆராய்ந்து கூறியுள்ளனர். சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுகிறார்கள். இளமையான வாழ்க்கையை சொகுசாக வாழ்ந்து விட்டு தேவையான சொத்து சேர்த்து வைத்துவிட்டு அரசியலுக்கு வருகிறார்கள். கட்சி தொடங்கியவுடன் சிலர் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். மேலும் 35 வருடங்களாக போராடி தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் இளமை காலத்தை துறந்து போராடியதால் தான் இந்த இடத்தை பிடிக்க முடிந்தது என்னால் என்று கூறினார்.