தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இன்று தனது 33-வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் -பிரேமலதா தம்பதியினர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி  வருகிறது. இந்த புகைப்படத்தில் பிரேமலதா சகோதரர் சுதீஷ், விஜயகாந்த், சண்முகம் பாண்டியன், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

 

இதேபோல் விஜயகாந்தின் திருமண நாளுக்கு இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான ஏ.எஸ் சந்திரசேகர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்திரசேகர் என் உயிரை சந்தித்தபோது என பதிவிட்டுள்ளார்.