பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இதனிடையே சொத்து பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறினார். மேலும் திமுகவின் பல்வேறு தலைவர்களும் இது குறித்து கருத்துக்களை கூறி வந்த நிலையில் திமுக சார்பாக 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

திமுகவினுடைய இந்த நடவடிக்கைக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக அண்ணாமலையும் 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும், டி ஆர் பாலுவும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் பிடிஆர் எப்போதுமே சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நபர். எதிர்தரப்பினர் கருத்துகளுக்கு உடனுக்குடன் சோஷியல் மீடியாவில் பதிலடி கொடுப்பவர். ஆனால், உதயநிதி – சபரீசன் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக லீக்கான சர்ச்சை ஆடிே டியோ குறித்து அவர் இதுவரை கருத்து எதுவும் சொல்லாமல், மவுனமாகவே இருக்கிறார். இதை எப்படி புரிந்து கொள்வது என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.