சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி, 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசியின் பெரிய போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 1996 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையுடன் சேர்ந்து ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியை நடத்தியுள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், அந்த நாட்டிற்கு இந்திய அணி செல்வதற்கு வாய்ப்பு கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய போட்டியில் கூட இந்தியா மோதிய போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. இதனால் இந்திய அணி மோதும் போட்டி மற்றும் வேறொரு இடத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.