தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் இரண்டாவதாக பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா (42) என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே நடிகர் விஷ்ணு விஷாலுக்கு முதல் திருமணம் மூலம் ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.

தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிறந்துள்ள பெண் குழந்தைக்கு நடிகர் அமீர்கான் மிரா என பெயர் சூட்டினார். இந்நிலையில் பெண் குழந்தைக்கு தாயான ஜூவாலா கட்டா அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்காக தாய்ப்பால் வங்கிக்கு தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக அவர் 30 லிட்டர் தாய்பாலை தானமாக வழங்கியுள்ளார். மேலும் தாய்ப்பால் தானம் வழங்கிய ஜுவாலா கட்டாவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.