கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னகிரி டவுன் பகுதியில் அம்ஜத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மருந்து கடைக்கு வரும் பெண்களுக்கு உதவி செய்வது போல் நாடகமாடியுள்ளார். பின்னர் அவர்களை தன்னுடைய வலையில் விழவைத்து தனக்கு சொந்தமான வீட்டில் வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதனை அவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்களை அதை காட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் வரவழைத்து தொடர்ந்து பலத்காரம் செய்துள்ளார்.

இவர் 30 பெண்களை கற்பழித்த நிலையில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. காவல்துறையினர் அம்ஜத்தை கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்த ஆபாச வீடியோக்கள் வைரலாகிறது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து அந்த வீடியோக்களை யாரும் பகிரக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் மீறி வீடியோவை பகிர்வது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.