பொதுவாக சமோசா என்றால் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில் 12 கிலோ எடை கொண்ட பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தொழிலை பிரபலம் செய்யும் வகையில் இனிப்பகத்தின் உரிமையாளர் ஷுபம் கௌஷல் இந்த யோசனையை முன்னெடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இதுவரை இந்த சமோசா சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாகுபலி சமோசாவின் விலை ரூ.1,100 என்பது குறிப்பிடத்தக்கது.