தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலப்புரம் கள்ளியூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிஜா(6) என்ற மகளும், லக்ஷன்(3) என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது. நேற்று மாலை பிரியங்கா தனது மகனுடன் கோபாலபுரம்- அ.பள்ளிப்பட்டி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் லக்ஷன் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த குழந்தையை பிரியங்கா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சரக்கு வாகன டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.