தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி “விடுதலை” படம் வாயிலாக கதாநாயகனாகி இருக்கிறார். இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சூரி அளித்துள்ள பேட்டியில் “நான் நகைச்சுவை நடிகராக வளர்ந்த பின் சில இயக்குனர்கள் என்னை கதாநாயகனாக நடிக்க வைக்க கதை கூறினார்கள். இப்படத்தில் வேறு சூரியை பார்ப்பீர்கள். விஜய்சேதுபதியும் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருக்கும்போது பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. எனினும் விடுதலை படப்பிடிப்புக்கு இடையூறு வரக்கூடாது என நினைத்து அவற்றில் நடிக்க மறுத்துவிட்டேன். நான் கதாநாயகனாக நடிப்பதை அறிந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார். இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் இயக்கும் படத்திலும், விக்ரம் சுகுமாரன் இயக்கும் படத்திலும், அமீர் இயக்கும் படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன்”என்று அவர் கூறினார்.