மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு இதயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் நிகழ்ந்தது. அங்கு அரவிந்த் என்ற இளைஞன் தனது லிவ்-இன் பார்ட்னர் நந்தினியை பகலிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். படுகாயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றவாளியை பிடிப்பதும் போலீசாருக்கு சவாலாக இருந்ததால் கண்ணீர் புகைப் பயன்படுத்தி அரவிந்தை கைது செய்தனர்.
எஸ்எஸ்பி தர்மவீர் சிங் கூறுகையில், நந்தினி ததியா பகுதியைச் சேர்ந்தவர், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. 2022-ல் அரவிந்துடன் தொடர்பு ஏற்பட்டு, விவாகரத்து இல்லாமலேயே கடந்த மூன்று ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தனர். அரவிந்தும் திருமணமானவர், அவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளனர். இந்த உறவின் போது இருவருக்கும் இடையே தொடர்ந்து சச்சரவுகள் நிகழ்ந்து வந்தன. 2024-ல் நந்தினி, அரவிந்த் தன்னை காரால் மோதி கொல்ல முயன்றதாக புகார் அளித்தார், இதில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ग्वालियर में दिनदहाड़े रूप सिंह स्टेडियम के सामने युवक ने युवती पर गोलियां दागीं।
पुलिस ने आरोपी को मौके पर पकड़ा, युवती गंभीर हालत में अस्पताल में।
युवक खुद को पति बता रहा है, पत्नी पर आरोप लगा रहा है कि पत्नी ने झूठा केस किया अपने बॉयफ्रेंड के साथ मिल के धोखा दिया lये कैसा… pic.twitter.com/uw9WiN30gf
— Shahid Raza (@IMohdShahidRaza) September 13, 2025
இந்த நீண்டகால பிரச்னைகள் இருவருக்கு இடையேயான உறவை மேலும் பதற்றமாக்கி நந்தினியின் உயிரை பறித்துள்ளது. கொலைக்குப் பின் போலீசார் அரவிந்த் மீது கொலை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்தது விசாரணை நடந்து வருகிறது.
