
லாகூரில் 14 வயது மைனர் சிறுமி, தன்னை 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி தனது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானில் மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. லாகூர் நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி மியான் ஷாஹித் ஜாவேத், குற்றம் சாட்டப்பட்ட ரபீக்கிற்கு இந்த தண்டனை விதித்தார். தீர்ப்பு வந்த ஒரு நாள் கழித்து, 3 மாதங்களாக தன்னை பலாத்காரம் செய்த தந்தையை மகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.