டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இவர் டெல்லியில் 2013-2023 காலகட்டத்தில் 28 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இனி வரவிருக்கும் 2 அல்லது 3 வருடங்களில் டெல்லியில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும்.

இரட்டை திறன் கொண்ட தண்ணீர் மற்றும் கழிவு நீர் பைப்புகள் அமைத்துள்ளோம். மாநிலத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக இந்த ஆண்டின் பட்ஜெட் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் டெல்லியில் மொத்தம் 101 மேம்பாலங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.