இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவால் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடித்தால், கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை போன்றவற்றை அதிகப்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவலில் உச்சமடைந்து வருகிறது. இது குறித்து கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா சார்ஜ் கூறியதாவது, இந்த கொரோனா அலையை கையாள நாங்கள் தயாராகி விட்டோம். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 13 பேர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்லும்போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். ஐசியூ மற்றும் வென்டிலேட்டர்கள் போன்றவைகளை தேவைக்கேற்ப அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என ஆயத்த நடவடிக்கைகள் குறித்து கூறினார்.