நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், தற்போது நீலாங்கரை வீடு தொடர்பான புதிய மோதலில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் இணைந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொடுத்த தமக்கு, இப்போது நீலாங்கரை வீட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் தமக்குத் தங்குவதற்குச் சொந்தமாக வேறு இடம் இல்லை என்றும், விவாகரத்து வழக்கு முடியும் வரை தங்களை அதே நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த உரிமையைக் கோரியபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் தமக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் சங்கீதா மனுவில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் விஜய்க்கு, அவரது சொந்தக் குடும்ப விவகாரம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.