தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையிலான அரசியல் மோதல் வலுத்துள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அறிக்கை” குறித்து வெளியிட்ட அறிவிப்பையும், கடந்த கால சாதனைகள் குறித்த அரசு காணொளியையும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் இந்த முயற்சிக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சரின் என்ற வாசகத்தைக் கிண்டல் செய்யும் வகையில், என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர்களின் சாதனைகளைச் சொல்லச் சொல்லும் முதலமைச்சர், “ஸ்டாலின் செட்டில்மெண்ட்” மூலம் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களைப் பற்றி எப்பொழுது சொல்லப் போகிறீர்கள்? என நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் கடந்த கால ஆட்சியில் நடந்த முறைகேடுகளை முன்வைத்து பாஜக தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதை இக்கருத்து வெளிப்படுத்துகிறது.
