அமெரிக்காவில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது மாணவர் முகமது குமேல் சேக், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் தனது முதுகலை படிப்பை முடித்த இவர், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டத்தைப் பெற்ற மறுநாளே, தங்கியிருந்த அறையில் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாதனை படைத்த கையோடு அந்த இளைஞன் மறைந்தது அவரது குடும்பத்தினரிடையே ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
படிப்புக்காக அமெரிக்கா சென்ற இளைஞன், தனது வாழ்வின் முக்கியமான இலக்கை எட்டிய உடனே உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது, மாணவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளில் இந்தியத் தூதரகமும், அங்குள்ள தன்னார்வ அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கான நிதி திரட்டும் பணிகளும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் நடந்து வருகிறது.
