தமிழகத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்த நிலையில் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமலாக துறையின் அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்காக 400-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்துள்ளனர். இந்த விசாரணை அனைத்தும் முழுமையான வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை செந்தில் பாலாஜி 150 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.