அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் ஒலிவர் என்ற நபர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு “பராலிசிஸ் ஏற்படுத்தும் சிண்ட்ரோம்” என்ற அரிய வகை நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க எண்ணிய ஒலிவர், வேலை வாய்ப்பை விட்டு விட்டு கடல் பயணத்தை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி ஏப்ரல் மாதம் பயணத்தை தொடங்கிய அவர் தனியாக ஹவாய் நோக்கி புறப்பட்டார். தனது செல்லப் பூனையை மட்டுமே கூட்டி சென்ற இவர் 25 நாட்கள் கடல் வழியாக பயணம் செய்தார். அந்தப் பயணத்தின் இறுதியில் ஹவாயின் கடற்கரைக்கு அருகே வந்தபோது, அமெரிக்க கடலோர காவல்படை அவரையும், அவரது பூனையையும் பாதுகாப்பாக வரவேற்றது.

அந்த அரிய தருணத்தை ஓலிவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் துணிச்சல் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள் என்னும் உண்மையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது.

மேலும் பூனையுடன் தனியாக கடலில் பயணித்த ஓலிவரின் துணிச்சலும், மனதை தொட்ட அவரது பயணக் கதையும், பலருக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.