பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் (OPS), கடந்த 24 மணி நேரத்திற்குள் முதல்வர் மு.க.ஸ்டாலினை மூன்று முறை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய பேசுபொருளாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து OPS திமுக கூட்டணியில் இணைவார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், திமுக அமைச்சரும் முக்கிய தலைவருமான கே.என்.நேரு, “OPS திமுக கூட்டணியில் வந்து கொண்டிருக்கிறார். NDA-வில் இருந்த பலரும் எங்களது பக்கம் வருவார்கள்” எனக் கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து, தமிழக அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. OPS தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாத நிலையில், எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்ப்புடன்  கவனித்து வருகின்றனர்.