ரயில் பயணிகளின் வசதிக்காக, முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை (Boarding Point) மாற்றுவதற்கான கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் தற்போது குறைத்துள்ளது. இதற்கு முன்பு, ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஆனால், தற்போது ரயில் புறப்படுவதற்கு வெறும் 30 நிமிடங்களுக்கு முன்பாகவே பயணிகள் தங்களுக்குத் தேவையான ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ள முடியும். இருப்பினும், ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் ரயில்வே விடுத்துள்ளது. பயணிகள் தாங்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும் அல்லது முறையாக மாற்ற வேண்டும்.
ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஏறவில்லை என்றால், அந்த இருக்கை தானாகவே வெயிட்டிங் லிஸ்ட்டில் (Waiting List) உள்ள மற்ற பயணிகளுக்கு வழங்கப்பட்டுவிடும். எனவே, கடைசி நேரத்தில் பயணத் திட்டத்தில் மாற்றம் இருந்தால் உடனே அப்டேட் செய்வது அவசியம்.
