விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி தேரோட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படாது. அன்றைய நாளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். வருகிற மார்ச் 4-ஆம் தேதி இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் விதமாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என கூறியுள்ளார்.