ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், அப்படி விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத விதமாக அரசு செயல்பட வேண்டும் எனவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி வழங்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காந்தி ஜெயந்தி நாள் அன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது.

அதேபோல் பொள்ளாச்சி, கோவை உட்பட ஆறு இடங்களை தவிர காவல்துறை அனுமதி வழங்கிய மூன்று இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தலாம். ஆறு இடங்களில் மட்டும் இயல்புநிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி காத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இதனை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சூழலுடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் அப்படி விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது மற்ற மதத்தினரை புண்படுத்தும் படி கோஷங்களை எழுப்பக் கூடாது என நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.