நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னுடன் நேரடியாக மோதி பார்த்து ஜெயிக்க முடியாததால் என்னுடைய வளர்ச்சியை பார்த்து பயந்து நடுங்கி இப்படி பாலியல் வழக்கு போட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறார்கள் என்று ஆளும் அரசின் மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக நேற்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது, என்னை பார்த்து அவர்கள் பயப்படுவதால் தான் இப்படி செய்கிறார்கள். இதுவே நான் ஒரு சாதாரண திரைப்பட இயக்குனராக மார்க்கெட் இல்லாமல் இருந்தால் இப்படி செய்வார்களா.? தமிழ்நாட்டில் அதிக வழக்குகளை சந்தித்த என் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது.

2026 தேர்தலில் மோதிப் பார்க்கலாம். திமுகவால் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட முடியுமா.? என்னைப்போன்று தனித்து நின்று ஸ்டாலின் எதிர்க்க தயாரா.? 234 தொகுதிகளிலும் காசு கொடுக்காமல் தனித்து நின்று திமுகவால் வெற்றி பெற முடியுமா. களத்தில் நின்று கருணாநிதி மகனா இல்ல பிரபாகரன் மகனா என்பதை பார்ப்போம். என் மீது நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன். என் மீது பல வழக்குகள் இருக்கும்போது இந்த வழக்கில் மட்டும் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறீர்கள். மேலும் 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வரும். ஆட்சி மாறும் என்பதை காவல்துறை மனதில் வைக்க வேண்டும் என்று கூறினார்.