முஷ்பிகுர் ரஹீம் களத்தில் பந்தை கையால் தடுத்ததற்காக அவுட் ஆகி வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஒருநாள் உலகக் கோப்பையில் ஏமாற்றமளித்த பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக வங்கதேச அணி திரில் வெற்றியைப் பதிவு செய்தது. சொந்த மண்ணில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேச அணி வெற்றி பெற்று இந்தியாவை பின்னுக்கு தள்ளி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால், இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து மீண்டும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழந்த விதம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 1951ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படியொரு விக்கெட் விழுந்துள்ளது. 

மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்டில், முதல் நாளில் வங்கதேச அணி 123 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.. மிர்பூரில் நடைபெற்ற மொத்த 27 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன, இதில் 2 போட்டிகள் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயானவை. இந்நிலையில் 2வது டெஸ்டில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய் (14), ஜாகிர் ஹசன் (8), கேப்டன் நஜ்முல் சாண்டோ (9), மோனிமுல் ஹக் (5) ஆகியோர் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களால் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பின் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷஹாதத் ஹொசைன் ஆகியோர் இணைந்து சிறிது நேரம் ஆடிக்கொண்டிருந்தனர், அப்போது தான் ஒரு சம்பவம் நடந்தது. 

கைல் ஜெமிஷன் 41வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் பந்தை முஷ்பிகுர் மட்டையால் ஆடினார், ஆனால் பின்னர் 4வது பந்தை கையால் தடுக்கச் சென்று பீல்டிங் தடை விதியின் கீழ் (obstructing the field) ஆட்டமிழந்தார். அவர் பந்து ஸ்டெம்பிற்கு வரக்கூடாது என நினைத்து பந்தை கையால் தடுத்தார், இதையடுத்து நடுவரிடம் ஜேமிஷன் உள்ளிட்ட நியூசிலாந்து வீரர்கள் மேல்முறையீடு செய்தனர் மற்றும் கள நடுவர்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய மூன்றாவது நடுவருக்கு அனுப்பினார். முஷ்பிகுர் வேண்டுமென்றே பந்தை நிறுத்தியதால் ரீப்ளே பார்த்துவிட்டு டிவி நடுவர் அவுட் கொடுத்தார்.

ரீபிளேவுக்குப்பின் அவுட் என அறிவிக்கப்பட்டது. புதிய விதிகளின்படி, இந்த நடவடிக்கை களத்தைத் தடுக்கும் வகையின் கீழ் வருகிறது. இப்படி அவுட் ஆகும் முதல் பங்களாதேஷ் பேட்ஸ்மேன் ஆனார் முஷ்பிகுர் ரஹீம், மேலும் முஷ்பிகுர் ரஹீம் கடந்த 22 ஆண்டுகளில் அவுட்டான முதல் பேட்டர் ஆனார். இதற்கு முன்பு முதன் முதலில் 1951-ல் இங்கிலாந்தின் லியோனார்ட் ஹட்டன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஓவல் மைதானத்தில் இதைச் செய்திருந்தார். டெஸ்டில் பந்தைக் கையால் தடுத்து அவுட்டான 8வது பேட்டர் மற்றும் ஒட்டுமொத்தமாக 11வது பேட்டர் ஆனார் முஷ்பிகுர். இப்போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்களுக்கு அவுட் ஆனார். வங்கதேச அணி 66.2 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 55/5 தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.

https://twitter.com/CricCrazyJohns/status/1732304521584636050

https://twitter.com/FollowBhi_Karlo/status/1732311979027513454