ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்பதை  தெரிந்து கொள்ளுங்கள்..

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை 237 போட்டிகளில் விராட் கோலி 7263 ரன்கள் எடுத்துள்ளார். ஷிகர் தவான் 2வது இடத்தில் உள்ளார். அவர் 217 போட்டிகளில் விளையாடி மொத்தம் 6617 ரன்கள் எடுத்துள்ளார். டேவிட் வார்னர் 3வது இடத்தில் நீடிக்கிறார். அவர் 176 போட்டிகளில் விளையாடி 6397 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா இதுவரை 243 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6211 ரன்கள் எடுத்துள்ளார். சுரேஷ் ரெய்னா 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5528 ரன்கள் குவித்துள்ளார். ஏபி டி வில்லியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 5162 ரன்கள் எடுத்துள்ளார். தோனியைப் பற்றி பேசுகையில், அவர் 250 போட்டிகளில் மொத்தம் 5082 ரன்கள் எடுத்துள்ளார்.

கிறிஸ் கெயில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 142 போட்டிகளில் விளையாடி 4965 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடி 4952 ரன்கள் குவித்துள்ளார் ராபின் உத்தப்பா. தினேஷ் கார்த்திக் பத்தாம் இடத்திற்கு வந்துள்ளார். தினேஷ் 242 போட்டிகளில் 4516 ரன்கள் எடுத்துள்ளார்.