அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் அதிரடி போர் விமானமான F-15E ரக விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. விமானம் நொறுங்கிய நிலையில், அதிலிருந்து பாராசூட் மூலம் குதித்து தப்பிய அமெரிக்க பைலட், சுமார் 48 மணிநேரம் ஈரான் ராணுவத்தின் கண்ணில் படாமல் ரகசியமாக ஒளிந்திருந்துள்ளார்.

​ஈரான் ராணுவம் அவரைத் தீவிரமாகத் தேடியும், அவர் சிக்கவில்லை. இறுதியாக, அவரிடமிருந்த CSEL (Combat Survivor Evader Locator) என்ற சிறிய தகவல் தொடர்பு கருவியின் உதவியுடன் தனது இருப்பிடத்தை அமெரிக்க ராணுவத்திற்குத் தெரியப்படுத்தினார். ஈரான் ராணுவத்தின் ரேடாரில் கூட சிக்காத இந்த அதிநவீன கருவியின் சிக்னலைப் பயன்படுத்தி, அமெரிக்கப் படைகள் விறுவிறுப்பான மீட்புப் பணியை நடத்தி அந்த பைலட்டைப் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.