வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சிறு வயதில் ‘ஜோசப் பவாக்’ என்ற போலிப் பெயரில் பிரேசில் நாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பானுக்குச் சென்றதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 1991-ஆம் ஆண்டு, கிம் ஜாங் உன்னிற்கு 8 வயது இருக்கும்போது, அவரும் அவரது சகோதரர் கிம் ஜாங் சுல்லும் இந்த போலி ஆவணங்கள் மூலம் ஜப்பானுக்குள் நுழைந்துள்ளனர்.
அங்கு சுமார் ஒரு வாரம் தங்கியிருந்த அவர்கள், டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்டிற்குச் சென்று பொழுதுபோக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர்களுடன் வடகொரிய அதிகாரிகளும் சென்றிருந்த நிலையில், இந்த ரகசியப் பயணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து 2018-ஆம் ஆண்டு வெளியான பிபிசி அறிக்கையின்படி, கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தை கிம் ஜாங் இல் ஆகிய இருவரும் 1990-களில் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வதற்காக இத்தகைய போலி பிரேசில் கடவுச்சீட்டுகளைத் தயாரித்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு கிம் ஜாங் உன்னின் மற்றொரு சகோதரரான கிம் ஜாங் நாம், இதேபோல் போலி கடவுச்சீட்டில் ஜப்பானுக்குள் நுழைய முயன்றபோது விமான நிலையத்தில் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
“>
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு சர்வாதிகாரி, சிறு வயதில் போலி அடையாளத்துடன் சுற்றுலா சென்றது குறித்த இந்தத் தகவல் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
