டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்ததை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகமே விரைவில் ‘சங்கி’ குழுவுடன் இணையப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘சங்கே முழங்கு’ என்று சங்கிகள் முழங்கப் போவதாகவும், மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் இதைப் பார்த்து அழுதுகொண்டிருக்க வேண்டியதுதான் என்றும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தமிழ் கலைஞர்களைச் சந்தித்து அவர்களுக்கு உரிய மரியாதையைத் தலைநகரில் வழங்கியுள்ளதாக தமிழிசை பெருமிதம் தெரிவித்தார்.
இதனால் காங்கிரஸ் கட்சி தமிழ் மொழிப் போராளிகளை எவ்வாறு ஒடுக்கியது என்பதை ‘பராசக்தி’ திரைப்படம் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டினார். திரைத்துறை கலைஞர்களுக்குப் பிரதமர் முக்கியத்துவம் அளிப்பதைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
