புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் என்.ஆர். காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதில், 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி சட்டசபை தொகுதிகளில் தவெக போட்டியிடும் நோக்கில், என்.ஆர். காங்கிரசுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட திட்டங்கள் தீவிரமாக நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் செய்திகள் குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது. தமிழக வெற்றிக் கழகம் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
தவெக ஒருங்கிணைந்த நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம் விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தவெக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக…
— TVK Party HQ (@TVKPartyHQ) September 3, 2025
“>
