2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரச்சாரப் பயணத்திற்கு `தளபதி 2026’ என பெயரிடப்பட்டிருப்பது, தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விஜய் பொதுமக்களிடம் உரையாற்ற சத்திரம் பேருந்து நிலையம் அருகே இடம் வழங்குமாறு காவல்துறையிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் இந்த சுற்றுப்பயணம், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளின் வலுவான பிரச்சாரத்திற்கு எதிரான சவாலாக பார்க்கப்படுகிறது.
