திமுக வாரிசு அரசியல் செய்கிறது என தொடர்ந்து விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தன் மூத்த மகனுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என பேசுகிறார்.

திமுகவின் வாரிசு அரசியல் செய்கிறது என தொடர் விமர்சனம் வைத்து வந்த சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியில் மனைவி மற்றும் மகனுக்கு முன்னுரிமை கொடுத்து வருவது அக்கட்சியினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.