தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே நம்முடைய நாட்டின் அடுத்த பிரதமர் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “பாஜகவும், அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. சிறுபான்மை வாக்குகளை பெறவே கூட்டணி இல்லை என அதிமுக பொய் கூறுகிறது.

இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருகிற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் ஆவார்” என்றார்.