2025 ஐபிஎல்லில் சிஎஸ்கேயில் எம்எஸ் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் ஆடலாம் என்று முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ்குப்தா கணித்துள்ளார்..

2024  ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. ஐபிஎல்லின் 10 அணி உரிமையாளர்களும்  தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளனர். எனவே இப்போது டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் மினி ஏலத்திற்காக அனைவரும் உற்சாகமாக உள்ளனர். 1166 வீரர்கள் இதற்கு பதிவு செய்துள்ளனர், அதில் 830 வீரர்கள் இந்தியர்கள். மும்பை இந்தியன்ஸ் தனது பழைய சக வீரரும் குஜராத் டைட்டன்ஸ் கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வரவிருக்கும் சீசனில் இதே போன்ற சில அதிர்ச்சிகளைக் காண முடியும். மகேந்திர சிங் தோனி ஐபிஎல் 2024ல் விளையாடுவார் என்பதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர், ஆனால் அவருக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்? இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

ஐபிஎல் 2024 தோனியின் கடைசி சீசன், அதன் பிறகு அவர் ஓய்வு பெறுவார் என்று மீண்டும் பேச்சு அடிபடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவருக்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் யாராவது வரும்போது, ​​அனைவரின் பார்வையும் அவர் மீதுதான் இருக்கும். இந்நிலையில் ஐபிஎல் 2025க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் விளையாடுவதைக் காணலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறியுள்ளார். 2025ல் ரிஷப்பை சேர்க்க சிஎஸ்கே முடிவு செய்யலாம் என்று முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ்குப்தா கருதுகிறார்.

தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா கூறியதாவது, “ஐபிஎல் 2025ல் ரிஷப் பந்தை அவர்கள் (சிஎஸ்கே) பெற்றால் ஆச்சரியப்பட வேண்டாம். எம்எஸ் தோனியும், ரிஷப் பந்தும் மிகவும் நெருக்கமானவர்கள். வெளிப்படையாக, ரிஷப் எம்.எஸ்ஸை நேசிக்கிறார், மேலும் எம்.எஸ் தோனியும் அவரை மிகவும் விரும்புகிறார். ரிஷப் பண்ட் தோனியை ரோல் மாடலாக கருதுகிறார். அவர்கள் இருவரும் ஒன்றாக நிறைய நேரம் செலவிடுகிறார்கள். அவர்களது தொடர்பும் ரிஷப்பின் சிந்தனையும் மிகவும் ஒத்திருக்கிறது, அவர் மிகவும் அதிரடியாக ஆடுவதும், நேர்மறையாகவும் இருக்கிறார். அவர் எப்போதும் வெற்றி பெறுவதைப் பற்றி பேசுகிறார், ”என்று கூறினார்.

கடந்த ஆண்டு கார் விபத்தில் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். அதன் பிறகும் அவர் குணமடைந்த நிலையில் இருக்கிறார். இருப்பினும், ஐபிஎல் 2024க்கு முன் பண்ட் உடல்தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் டெல்லி அணியிலிருந்து நீக்கப்படுவாரா? இல்லையெனில் தானாக விலகி சென்னை அணிக்கு வருவாரா என்பதற்கு எந்த உறுதியான தகவலும் இல்லை..