இந்திய அணியில் 4 பேட்ஸ்மேன்கள் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 7 சதங்களை அடித்துள்ளனர்.  

அகமதாபாத்தில் நடந்த 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால், 3வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது. 6வது முறையாக உலக சாம்பியனாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி 42 பந்துகள் மீதம் வைத்து எட்டியது..

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் பல சாதனைகளை படைத்தது. ஒட்டுமொத்தமாக, போட்டி முழுவதும் இந்திய பேட்ஸ்மேன்கள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியில் 4 பேட்ஸ்மேன்கள் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 7 சதங்களை அடித்துள்ளனர்.  

1. ரோகித் சர்மா (131): 

இந்திய அணிக்கு முதல் சதம் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டில் இருந்து வந்தது. டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் வெறும் 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்திருந்தார். இதன் போது ரோஹித் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களை விளாசினார். இந்த சதத்தின் மூலம் ரோஹித் மிகப்பெரிய சாதனை படைத்தார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார். 6 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரை ரோஹித் பின்னுக்குத் தள்ளினார்.

2. விராட் கோலி (103*) :

விராட் கோலி 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக இரண்டாவது சதத்தை அடித்தார். புனேவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், கிங் கோலி 97 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சதம் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

3. விராட் கோலி (101) : 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 101 ரன்கள் எடுத்து சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். 121 பந்துகளில் 10 பவுண்டரிகள் விளாசினார் கோலி. கோஹ்லி தனது 35வது பிறந்தநாளில் இந்த சதத்தை அடித்திருந்தார். இது அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 49வது சதமாகும்.

4. ஷ்ரேயஸ் ஐயர் (128*) : 

பெங்களூருவில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஸ்ரேயாஸ் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களை விளாசினார்.

5. கே.எல்.ராகுல் (102) :

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலும் சதம் விளாசினார். ராகுல் 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பையில் சதம் அடித்த 2வது இந்திய விக்கெட் கீப்பர் ராகுல். ராகுல் 62 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் இதுவாகும்.

6. விராட் கோலி (117) : 

வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி இன்னிங்ஸ் ஆடி 113 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 50 சதங்கள் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைத்தார். கோலி தனது சதம் இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்திருந்தார்.

7. ஷ்ரேயாஸ் ஐயர் (105) : 

அரையிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணிக்கு எதிராகவும் ஸ்ரேயாஸ் சதம் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்தார். நடப்பு உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும்.