
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாள்கள் இருக்கிறது. 2024 எலெக்ஷன் சூடு அப்படி ஒன்னும் ஆரம்பிக்கல. எலெக்ஷன்னுக்கான களம் என்ன ? இப்போதைக்கு நமக்கு தெரியும் எதிர்க்கட்சிகள் முன் வைக்க கூடிய குற்றசாட்டுக்கு எல்லாம் வெறும் அரசியல் குற்றசாட்டுகள். 2024 எலெக்ஷன் குற்றசாட்டுகள் இல்லை. ஆனால் அதற்கான நேரம் வரும்பொழுது உங்களுக்கு தெரியும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்குது, நேரம் இருக்குது. அதற்கு முன்பு நிறைய விஷயங்கள் பாரதிய ஜனதா கட்சி செய்ய வேண்டும். அதற்கான நிறைய உள்கட்டமைப்புகளை நாம ஏற்படுத்தனும். அதற்காகத்தான் போயிட்டு இருக்கோம். 5 மாநிலத்துல தேர்தல் நடக்குது.
ஒரு அகில இந்திய கட்சியாக 5 மாநிலத்தை நாங்க பாக்குறோம். முக்கியமான மாநிலங்கள். 3 மாநிலங்கள் ஹிந்தி ஹாட் லேண்ட் ஏரியால இருக்கு. மிசோரம் இருக்கு, தெலுங்கானா இருக்கு. இன்னைக்கு அதற்கான அவசரம் இல்லைங்க. 39 மக்களவை தேர்தலில் டாப் 5 என சொல்லுவதை விட, பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய தலைமை. 9 இடங்களுக்கு ஸ்பெஷல் கவனம் கொடுக்குறாங்க என்பதை தாண்டி, அந்த 9யை விட முக்கியமான தொகுதிகள் வெளியே இருக்கு என தெரிவித்தார்.