நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையை தேமுதிக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் மக்களவைத் தேர்தலில் 11 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தேமுதிக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாஜகவிடம் 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு தேமுதிக மறுப்பு தெரிவித்துள்ளது. நாளை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

தேமுதிக 11 தொகுதிகள் கேட்டுள்ளது குறித்து பாஜக தரப்பில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிக்கு தொகுதி பங்கீடு குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திவரும் நிலையில் தேமுதிக முதல் கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.