தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  இந்நிலையில் 2024 தேர்தலில் மும்பை வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவு வேட்பாளர் ரவீந்திரா தத்தாராம் வைக்கருக்கு 4,52,644 வாக்குகள் கிடைத்தன.

அவருக்கு அடுத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வேட்பாளர் அமோல் கஜனன் கிர்திகாருக்கு 4,52,596 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் வைக்கர் 48 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இதுவே 2024 தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாச வெற்றி ஆகும்.