பல்கேரிய நாஸ்டர் டாமஸ் என்று பாபா வங்கா பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி உயிரிழந்தார். இவர் உலக நடப்புகள் தொடர்பாக கனித்து கூறியுள்ளவை 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் தலைப்பு மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் என பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அவர் கனைத்துள்ள சில சம்பவங்களும் தற்போதும் அரங்கேரி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திப்போம் என்றும் குவாண்டம் கணினிகள் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனைப் போலவே ரஷ்ய அதிபர் தனது சொந்த நாட்டை சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார். ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரிக்கும். உலகின் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகின்ற ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் கேட்கும் திறமை பறிபோய் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் தற்போது வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது.