உலகில் வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும் என்பதால் அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை ஆபத்துகளில் ஒன்றாக வெப்ப அலைகள் கருதப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வால் உயிர் இழக்கின்றனர்.

இந்நிலையில் வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும் என்றும் அதனை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. வெப்ப அலைகளை தடுப்பதற்கு கார்பன் எரிபொருள்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின் மயமாக வேண்டும். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக வெப்பாலை அதிகரித்து வருகிறது. மனித ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களில் மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.