மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இம்முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல்வேறு துறைகளுக்கு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிகமான வரி செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

அத்துடன் இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டங்களின் உற்பத்தியை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்து உள்ளது. இதன் வாயிலாக செமி கண்டக்டர் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் மக்களுக்கு பயன் கிடைக்கும். அனைவருக்கும் வீடு வழங்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது. அரசின் தற்போதைய திட்டங்களைத் தவிர்த்து இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகலாம்.

மேலும்  குழாய், கேபிள் ஆகிய பல துறைகளில் தொழில்கள் வேகம் பெறக்கூடும். யூனியன் பட்ஜெட் 2023ல் மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்ஆர்ஏ விலக்கு வரம்பு 50% ஆக அதிகரிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது தவிர்த்து சம்பளம் பெறாத நபர்களுக்கு ( நான்-சேலரீட் கிளாஸ்) எச்ஆர்ஏ விலக்கு வரம்பை 60,000 ரூபாயில் இருந்து அதிகரிக்கலாம். எச்ஆர்ஏ-ல் விலக்கு அளிப்பது குறித்து நிதியமைச்சகத்தால் பெரிய திட்டம் தயாரிக்கப்படுகிறது.