கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‌ பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு h5h1 வைரஸ் தொற்றும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அரசு நடத்தி வரும் கோழிப்பண்ணையில் உள்ள 5000 கோழிக்குஞ்சுகளில் 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கோழிகளை கொல்வதற்கான நடைமுறைகள்  நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் கேரளாவில் பரவும் பறவை காய்ச்சலால் தமிழகத்தில் கோழி பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படுமோ என்று கோழிப்பண்ணையாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.