உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங் தற்போது இந்த மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளார்‌. இதன் மூலமாக இந்த மசோதா சட்டம் ஆகி உள்ளது.

தற்போது இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி சட்டசபையில் கூறியதாவது, பிற மாநிலங்களை விட உத்தரகாண்டில் பெண்களின் நிலைமை மோசமாக உள்ளது. இந்த இட ஒதுக்கீடு முறை மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். மேலும் சமூகநீதி, பாலின சமத்துவம் மற்றும் வாய்ப்பு சமத்துவம் போன்றவை உறுதி செய்யப்படும் என கூறியுள்ளார்.