2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023ல் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் இருக்கமாட்டார் என்பதை பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். பந்த் தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்த் காயம் டெல்லி கேப்பிட்டல்ஸை பாதிக்கும்,” என்றும் கங்குலி கூறினார்.
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே திடீரென ரிஷப் பண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டது. ரிஷப் பண்ட் கண் அசந்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் கார் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவரை அவ்வழியாக சென்ற ஹரியானா பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் சகபயணிகள் மீட்டனர். இதையடுத்து அவர் முதல்கட்டமாக சாக்சம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, டோராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ரிஷப்புக்கு நெற்றியில் 2 வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கால்விரல் ஆகியவற்றிலும் காயமடைந்தார், மேலும் அவரது முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது மும்பையிலுள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் பந்த்.. இவர் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி கிரிக்கெட் ஆட 2 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.