மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேகாலயா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை கடந்த சில நாட்களாகவே பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிரடி வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது தேர்தலில் வெற்றி பெற்றால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு வரை கல்வி இலவசம் என்றும் இலவச அறிவிப்புகளை காங்கிரஸ் அள்ளி வீசி வருகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி மேகாலயாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
