வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன், தனது சின்னமாக விளங்கும் குண்டு துளைக்காத பச்சை ரயிலில், 20 மணி நேர பயணத்திற்கு பிறகு சீனாவின் பெய்ஜிங் நகரை வந்தடைந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக அவர் சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்த அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
பச்சை ரயிலின் ரகசியங்கள்:
கிம்மின் பயணம் மட்டும் இல்லாமல், அவர் பயணிக்கும் ரயிலும் மிகவும் ரகசியமானதும் பாதுகாப்பானதும். இந்த ரயில்:
குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசத்தில் உருவாக்கப்பட்டுள்ளது
20-க்கும் மேற்பட்ட பெட்டிகள் கொண்டது
வேகம் மணிக்கு 45 கி.மீ. மட்டுமே
பாதுகாப்புக்காக முன்புறத்தில் துப்பாக்கியுடன் பாதுகாப்பு வீரர்கள், நடுப்புறத்தில் கிம் ஜாங் உன், பின்னால் சாமான்கள், தகவல் அறை, பாதுகாப்பு பயணிகள் என விரிவாக அமைந்துள்ளது
மாநாட்டு அறைகள், சொகுசு வசதிகள், மற்றும் தரமான தகவல் தொடர்பு அமைப்புகள் கொண்டது
Kim Jong-un arrives in Beijing via his BULLETPROOF train ‘Sunshine’
The North Korean leader is attending the Victory Day parade and Xi-Putin trilateral
RT pic.twitter.com/PPaFjBaZlh— TifaniesweTs (@TifaniesweTs) September 2, 2025
“>
பயண பாதை எப்படி?
பியோங்யாங்கில் இருந்து பெய்ஜிங் வரையிலான இந்த ரயில் பாதை:
சினுய்ஜு நகரம் வழியாக யாலு நதி பாலம் கடக்கும்
சீனாவின் டான்டோங், ஷென்யாங், லியோனிங் மாநிலம், மஞ்சூரியா மலைத்தொடர்கள் வழியாக நகரும்
177 பாலங்கள், 5 சுரங்கப்பாதைகள், மற்றும் 1200 மீ நீளமுள்ள மிகப்பெரிய பாலம் போன்றவற்றை கடக்கும்
கிம் – சீனா – ரஷ்யா உறவு என்ன சொல்கிறது?
இந்த பயணம் வழியாக, கிம் ஜாங் உன், ஜி ஜின்பிங், புடின் ஆகிய மூவரும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்ற்றினார்கள். இதன்மூலம்:
அமெரிக்க எதிர்ப்பு கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சி
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போருக்கு வட கொரியா ஆதரவு அளிப்பது
சீனாவின் நிதி மற்றும் அரசியல் ஆதரவை உறுதி செய்வது
கிம்மின் இந்த பயணம், வெறும் ஒரு பயணமாக இல்லாமல், உலக அரசியல் அமைப்பில் ஒரு புது மாற்றத்தை குறிக்கும் நடவடிக்கை என்றும் கூறலாம். அவர் பயணித்த குண்டு துளைக்காத ரயில் அவரின் அதிகாரம், பாதுகாப்பு மீதான அக்கறை, மற்றும் உலகத்தின் முன்னணி தலைவர்களுடன் இணையும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
