கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வி தனது தாயுடன் சிங்காநல்லூரில் இருந்து அரசு பேருந்து ஏரி பாலசுந்தரம் ரோடு மகளிர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். இதனையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். பின்னர் ஆட்டோவிற்கு பணம் கொடுப்பதற்காக கலைச்செல்வி பர்சை தேடியுள்ளனர்.

அப்போது பர்சில் பணம் இல்லாததை கண்டு கலைச்செல்வி அதிர்ச்சி அடைந்தார். அந்த பார்சல் ஏடிஎம் கார்டு மற்றும் 84 ஆயிரத்து 450 ரூபாய் பணம் இருந்துள்ளது. உடனடியாக இருவரும் மீண்டும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தனர். அவர்களை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் தப்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா மற்றும் லட்சுமி என்பதும், 3 பெண்களும் பேருந்தில் இருந்த கூட்டத்தை பயன்படுத்தி கலைச்செல்வியின் மணி பர்சை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்தால் ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.