கத்தாரில் நடைபெற்ற உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற பிளிட்ஸ் தொடரின் ஓபன் பிரிவில், 19 சுற்றுகள் கொண்ட சுவிஸ் முறை ஆட்டங்களின் முடிவில் கார்ல்சென் 9-வது முறையாக உலக பிளிட்ஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.

முன்னதாக நடைபெற்ற ரேபிட் பிரிவிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே ஆண்டில் இரண்டு வடிவங்களிலும் மகுடம் சூடி, ஒட்டுமொத்தமாக தனது 20-வது உலக சாம்பியன் பட்டத்தை அவர் வசப்படுத்தியுள்ளார். பெண்கள் பிரிவில் பிளிட்ஸ் சாம்பியன் பட்டத்தை கஜகஸ்தானின் பிபிசாரா அசாபாயேவா வென்று அசத்தினார்.

இந்தத் தொடரின் 14-வது சுற்றில் அர்மேனியாவின் ஹேக் மார்ட்டிரோசியனுக்கு எதிராக கார்ல்சென் விளையாடியபோது ஒரு பரபரப்பான விதிமீறல் சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டத்தின் இறுதி நொடிகளில் கார்ல்சென் கைவசம் 2 வினாடிகள் மட்டுமே இருந்த நிலையில், வேகமாகக் காய்களை நகர்த்த முயன்றபோது தவறுதலாகப் பல காய்களைத் தட்டிவிட்டார். பிளிட்ஸ் விதிமுறைப்படி, காலக் கணக்கீட்டை நிறுத்துவதற்குள் காய்களைச் சரியான இடத்தில் வைக்க வேண்டும். ஆனால், பதற்றத்தில் இருந்த கார்ல்சென் காய்களை முழுமையாக அடுக்காமலேயே கடிகாரத்தை அழுத்தினார்.
<a href=”http://

“>
இதனை நடுவர் விதிமீறல் என அறிவித்து மார்ட்டிரோசியன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இருப்பினும், இந்தச் சரிவிலிருந்து மீண்டெழுந்த கார்ல்சென், அடுத்தடுத்த ஆட்டங்களில் அபாரமாக விளையாடி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.